நாகர்கோவில் மாவட்டத்தில் கல்லூரியில் பணியாற்றி வரும் சிலம்பரசன் என்பவர் தனக்கு மனைவி , குழந்தைகள் இருந்த நிலையில் கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.
வசந்தி என்ற மாணவி வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன்.
அவர் ஏற்கெனவே விதவையான ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்தநிலையில் வசந்தியோடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், கல்லூரியில் இருந்து இவர்கள் இருவரும் ஓடிப்போயுள்ளனர்.
இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான் என கூறியுள்ளார்.
மேலும், சிலம்பரசனின் மனைவி, வந்துவிடுங்கள் என கண்ணீர் விட்டு கதறியும், அதனை காதில் வாங்கிகொள்ளாத , நான் அவளுடன் தான் சேர்ந்து வாழப்போகிறேன் என உறுதியாக கூறியுள்ளார்.