#மீ டூ# விவகாரம் தற்போது மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் இதன்மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழர்களின் அடையாளமாய் இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக வைரமுத்துவின் விவகாரம் அனைத்து ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. எங்கு, யாரை பார்த்தாலும் செய்தியாளர்கள் கேக்கும் கேவி “மீ டூ” விவகாரம், வைரமுத்து விவகாரம் பற்றி உங்கள் கருது என்ன என்றே கேட்கின்றனர்.
இந்த நிலையில் வைரமுத்துவுக்கு என்று இருக்கும் விக்கிபீடியா பக்கத்தில், இதுவரை அவரது பெருமைகள், வரலாறு போன்றவை பற்றி எழுதப்பட்டு வந்தன.
ஆனால், தற்போது அவர் குறித்த பிரச்சனைகள் என்று ஒரு காலம் உருவாக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டில் வைரமுத்து பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது. இதில், பாடகி சின்மயி மற்றும் சிந்துஜா ஆகிய இருவரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இதற்காக பல தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒருவர் குற்றவாளி என உறுதிப்படுத்தாமல் இவ்வாறு ஒரு புகழ்பெற்ற மனிதரை கொச்சை தனமாக பேசுவது. தமிழுக்கு செய்யும் துரோகம் என கூறுகின்றனர்.