கண் விழித்து பார்த்தபோது படுக்கையில் என் பக்கத்தில் அவர் …பிரபல நடிகர் மீது பாலியல் குற்றசாட்டு வைத்த நடிகை.!

மலையாள நடிகர் அலென்சியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை திவ்யா கோபிநாத் அதிரடி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மலையாள நடிகர் அலென்சியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை திவ்யா கோபிநாத் புகார் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து ஏற்கனவே தான் பெயர் இல்லாமல் ஒரு கடிதம் வெளியிட்டதாகவும், படபிடிப்பில் அலென்சியர் தன்னிடம் எவ்வாறு நடந்துகொண்டார் எனவும் திவ்யா பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அலென்சியர் பற்றி திவ்யா கூறியிருப்பதாவது, நான் என்னுடைய 4வது படத்தில் அலென்ஸியர் உடன் சேர்ந்து நடித்தேன். மேலும் அலென்சியரை நேரில் சந்திக்கும் வரை மூத்த நடிகர் அவர் மீது நான் பெரும் மரியாதை வைத்திருந்தேன்.

ஆனால் படப்பிடிப்பில் ஒருநாள் மதியம் சாப்பிடும் போது என்னுடன் அலென்சியர் மற்றும் ஒரு நடிகர் அமர்ந்து இருந்தார்கள் .அப்போது அலென்சியர் என் மார்பு பகுதியையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு உடம்பே கூசியது. பெரும்சங்கடமாகி விட்டது.

மேலும் ஒரு நாள் அவர் நடிகை ஒருவருடன் என் அறைக்குள் வந்து கலைஞரின் சுதந்திரம் பற்றியும்,எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் எனக்கு அறிவுரை வழங்கி நீ ரொம்ப வீக் என்று கூறி என்னை அசிங்கப்படுத்தினார். எனக்கு அவர் மீது பெரும் கோபம் எழுந்தது.எழுந்து வெளியே போ என சொல்லவேண்டும் போல இருந்தது. ஆனால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

பின் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் என்னை பார்த்துக் கொண்டே இருந்ததுடன் அசிங்கமாக நாக்கை சுழற்றி மோசமாக சைகை செய்தார். மேலும் அன்று மாலை நடந்த பார்ட்டி ஒன்றில் என் கண்முன்னே அலென்சியர் பெண்களிடம் பாலியல் தொடர்பாக அசிங்கமாக பேசினார்.

மற்றொரு நாள் என் அறையில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது என்னுடன் தங்கியிருந்த பெண் கதவை பூட்டாமல் குளிக்க சென்றுள்ளார்.அப்பொழுது அலென்சியர் என் அறையில் நுழைந்து படுக்கையில் என் அருகே வந்து படுத்துள்ளார்.

நன்கு தூங்கிக் கொண்டிருந்த நான் பக்கத்தில் ஏதோ இருப்பதை உணர்ந்து கண் விழித்த போது அலென்சியர். என் பக்கத்தில் படுத்திருந்தார். பயத்தில் அதிர்ந்து நான் எழ முயன்ற போது அவர் என் கையை பிடித்து இன்னும் கொஞ்சம் நேரம் படு என்றார். இதனால் கோபமடைந்த நான் அவரை வெளியே போகுமாறு கூறி நான் சத்தம் போட்டேன். பின்னர் அலென்சியர் அங்கிருந்து சென்றுவிட்டார் என்று திவ்யா கூறியுள்ளார் .