தன்னை விட்டு பிரிந்து வாழ்ந்த மனைவியை கணவன் பேருந்து நிறுத்தத்தில் வைத்து வெட்டி கொலைசெய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலூர் அருகேயுள்ள அழகிரிபட்டியைச் சேர்ந்தவர் பிரபு . இவர் டெல்லியில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.இவரது மனைவி ராதிகா. இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ராதிருமணம் செய்துகொண்டனர் .
இந்நிலையில் பிரபு தனியாக உணவகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என ராதிகாவின் அனைத்து நகைகளைகளையும் அடமானம் வைத்து உணவகத்தை ஆரம்பித்துள்ளார். ஆனால் அதில் வருமானம் அதிகமாக இல்லாததால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவனை விட்டு பிரிந்து ராதிகா அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பிரபு பலமுறை ராதிகாவை சந்தித்து சமாதானம் பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது பேச்சை ராதிகா சிறிதும் கேட்காமல் இருந்ததால் பிரபு பெரும் ஆத்திரமடைந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வேலை முடிந்து பேருந்துக்காக ராதிகா காத்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த பிரபு ராதிகாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் விழுந்த ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து பிரபுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.