ஒரு மாத காலத்தில் சுவிஸ்சில் இருந்து பாரிசுக்கு தப்பி ஓடிய 30 தமிழ் அகதிகள்!

சுவிஸ் நாட்டில் தஞ்சம் கோரி அங்கு தங்கி இருந்து அவர்களது அகதி அந்தஸ்துக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் தனியான சட்டத்தரணிகளை நியமித்து அந்த சட்டத்தரணிகளூடாக  இவர்கள் தாக்கல் செய்த மேலதிக பத்திரங்களால் வந்த சோதனை.

சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்துக் கோரி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு வந்த சோதனை இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சூழ் நிலை இருக்கும் பொது பல அகதிக் கொரிக்கயாலர்களுக்கு குறுகிய விசாரணையின் பின் இலங்கையில் பிரச்சனை தீரும் வரையாவது இங்கு தங்கி இருக்கும் நிலை இருந்தது.

ஆனால் இன்று சிங்கள தரப்பு ஆளும் தரப்பாகவும் தமிழ் தரப்பு எதிர்த்தரப்பாகவும் நல்லிணக்க அரசு என்னும் நிலையில் சுவிஸ் நாட்டில் உள்ள தமிழ் அகதிகளுக்கு இலங்கையில் உயிராபத்து என்பதை நிரூபிக்கும் எந்தவித காரணமும் இல்லாமல் போய்விட்டதே இன்றைய சுவிஸ் அகதி அந்தஸ்துக் கோரிய ஈழத்தமிழர்களுக்கு ஏற்றப்பட்ட நிலை,

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பிரித்தானியா சுவிஸ் ஆகிய நாடுகள் ஒன்றில் ஒன்றினயாமல் கோள்கள் அளவில் மட்டுமே இணக்கம் கண்டிருந்தது அதில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் நிலையில் இறுதி வாக்கெடுப்புக்காக காத்திருக்கின்றது,

சுவிச்நாடோ கொள்கையளவில் மட்டும் எல்லைப்புறக் காவலுடன் குடிவரவு குடியகல்வு என்னும் திடமான நிலைப்பாட்டில் அதாவது சுவிஸ் நாட்டைச் சூழ்ந்துள்ள எல்லைனாடுகலான ஜெர்மன்.இத்தாலி,பிரான்ஸ்,ஒஸ்றியா ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான எல்லைப் போக்குவரத்து தொழிலாளர் போக்குவரத்து என்னும் அடிப்படையில் குடிவரவு குடியகல்வு சட்டமான டப்ளின் சட்டத்தில் கைச் சாத்திட்டுள்ளது.

இந்தச் சட்டத்திநூடாக   சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரும் ஒருவர் அவரது அகதி தன்ச கோரிக்கை நிராகரிக்கப் பட்டால் அவரை அவர் எந்த ஐரோப்பிய நாட்டில்  தனது நாட்டில் இருந்து வந்து இறங்கினாரோ அந்த நாட்டிற்க்கே அவர்களைத் திருப்பி அனுப்புவதாகும் இதில் ஈழத்தமிழர்கள் தங்களது பயணப் பாதையை முன்னுக்குப் பின்னாக முரணாக வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.

இந்தநிலையால் பலரது அகதிக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டுள்ளது அவர்கள் மீண்டும் ஒரு சட்டத்தரணி ஊடாக மேலதிகள் எழுத்து மூல ஆவணங்கள் சமர்ப்பித்து தங்களது உயிருக்கு இலங்கையில் ஆபத்து இருக்கின்றது என்று விண்ணப்பம் செய்கின்றனர்  அப்படி விண்ணப்பம் செய்தவர்களில் சிலரே இவ்வாறு தப்பி ஓடி உள்ளனர்.

இலங்கையில் இருந்து இலங்கை நீதிமன்றின் கைது ஆணை அல்லது CID யினரின் தேடுதல் ஆணை இதனால் தங்களது குடும்பத்தினருக்கும் CID யினரால் மரண அச்சுறுத்தல் அல்லது தொடர்ந்து துன்புறுத்தல் என பலவாறான எழுத்து மூல அவனங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றின் பிடியாணை சுவிஸ் விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதை பொய்யெனக் கண்டு பிடித்த விசாரணை அதிகாரிகள் இது குறிப்பிட்ட சிலரால் தயாரிக்கப்படும் போலி ஆவணம் என்பதைத் தெரிந்து கொண்ட விசாரணை அதிகாரிகளிடம் இரண்டாவது விசாரணையில் சிலர் இது போலி ஆவணம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர் அவர்களுக்கு இரண்டு வாரத்தில் மீண்டும் தங்கள் தங்கி இருக்கும் முகாமின் அதிகாரிகளிடம் ஆஜராகச் சொல்லி இருக்கின்றனர் பயத்தில் பலர் தப்பி ஓடி உள்ளனர் சிலர் உடுத்த உடுப்பைக்  கூட  எடுக்காமல் தலை மறைவாக உள்ளனர்,

இப்படி போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதால் உண்மையான அகதி அந்தஸ்துக் கோருபவர்களின் விண்ணப்பமும் நிராகரிக்கப் பட்டுள்ளது  இதில் சிலர் இலங்கை விட்டு 2008 ம் ஆண்டே நாட்டை விட்டு வெளியேறியதாக அங்கு இங்கு என்று தங்களுடைய ஏஜென்சி கடந்தவருடம் தான் சுவிஸ்சில் இறக்கி விட்டதாகவும் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர் இதுபோன்ற முன்னுக்குப் பின்னான முறைப்பாடுகளால் எல்லோரது அகதி அந்தஸ்து விண்ணப்பங்களும் கேள்விக் குடியாக உள்ளது.

இனியும் எந்த ஒருவரது போலி வார்த்தைகளை நம்பி போலி பத்திரங்களை வரவழைத்து கொடுக்கவேண்டாம் ஒருவரது அகதி விண்ணப்பத்தை அவரது இலங்கை சாரதி அனுமதிப் பத்திரமே நிராகரிக்க வைத்துள்ளது குறிப்பிட்ட நபர் இலங்கையில் இருந்து வெளியேறிதினம். அதன்பிறகு கட்டாரில் இருந்த தினம் கட்டாரில் தான் பணி புரிந்த காலம் கட்டாரில் பனிக்காலம் முடிந்ததும் இலங்கை சென்றால் தனது உயிருக்கு ஆபத்து என்றும்.

அதனால் ஒரு அரேபிய ஏஜென்சி மூலம் பிரான்ஸ் வந்து அங்கிருந்து பாரிசில் உள்ள ஏஜென்சி மூலம் பாரிசில் இருந்து சுவிஸ் வந்து தனது  உயிரைக் காத்துக் கொள்ள இங்கு அகதி அந்தஸ்துக் கோரி உள்ளேன் என்று தனது தரப்பு எல்லா விபரங்களையும் சரியாகச் சொன்னவர் தன்னிடமிருந்த சாரதி அனுமதிப் பத்திரம் சுவிஸ்சுக்கு வருவதற்கு ஒருவார இடை வெளியில் பெறப்பட்டுள்ள விபரம் அதில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கிய தினம்  குறிப்பிடப்பட்டுள்ளதை மறந்து விட்டார் அவருக்கு ஒருவாரத்தில் நாட்டை விட்டு வெளியேற குறிப்பிடப்பட்டிருந்ததுடன் ஒரு வருடத்திற்க்கு சுவிஸ் நாட்டிற்க்குள் நுழையக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,