தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலின் தலையை வெட்டிவிட்டு காதலனும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஜகஸ்தான் நாட்டை சேர்ந்தவர் ஷயங்கிஸ் பேகேனோவ். 26 வயது நிறைந்த இவர் உயர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட இளம் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் மருத்துவ பட்டம் பெற்ற நஸிற்கே பெக்ழநோவா என்ற 21 வயது நிறைந்த இளம் பெண்மருத்துவரிடம் தன்னுடைய காதலை தெரிவித்துள்ளார்
ஆனால் இதற்கு ஆண்ட பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெண் பேகேனோவ் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேகேனோவ், கத்தியால் தன்னுடைய காதலியின் தலையை வெட்டி இரண்டாக துண்டித்து தாஸ்பாகெட் என்ற கிராமம் அருகே வீசியுள்ளார்
பின்னர் தான் பணிபுரியும் இடத்திற்கு திரும்பிய அவர் வயிற்றில் கத்தியால் குத்திகொண்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் இதனை பார்த்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்த போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் வெல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலை கண்டுபிடித்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில், ‘எங்கள் இருவரையும் ஒன்றாக புதைத்து விடுங்கள்’ என பேகேனோவ் எழுதி வைத்திருந்த கடிதமும் சிக்கியது.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.