பிரபல நடிகர் மீது அதிரடி குற்றசாட்டை வைத்த தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனி.!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் நடிகைகள் மற்றும் பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக # metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.இதில் பல பிரபலங்களும் சிக்கி வருகின்றனர்.

மேலும் இதில் திரையுலகமே மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து மீது நடிகை சின்மயி பாலியல் குற்றசாட்டை வைத்தார். இதனால் திரையுலகமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது.
மேலும் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் metoo வில் சிக்கி,தனது அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டார்.

இவ்வாறு தொடரும் பாலியல் குற்றச்சாட்டில் தற்போது நடிகர் ஜான் விஜய் மீது பின்னணி பாடகியும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி பாலியல் புகார் கூறி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் “இந்த சம்பவம் தனக்கு 2014-ல் நடந்ததாக குறிப்பிட்டு, நடிகர் ஜான் விஜய் மீது புகார் கூறி பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, “நடிகர் ஜான் விஜய் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார். வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தும் தவறான மனம் கொண்டவர். ஒருமுறை நான் அவரை பேட்டி எடுத்தேன் . ஆனால் அது முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் நள்ளிரவில் அவர் எனக்கு ஃபோன் செய்தார். நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன்.

என்னிடம் நிகழ்ச்சி ஒளிபரப்பு பற்றி நீங்கள் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே என வழிந்தார். நான் நாளை பேசுகிறேன் என்றேன். ஆனால், அவரோ தொலைபேசியில் ஆபாசமாக பேச முற்பட்டார். மேலும் போன் செக்ஸ் வேண்டும் என்றார். உங்கள் மனைவிக்கு நான் ஃபோன் செய்வேன் எனக் கூறியவுடன் தான் அவர் அழைப்பைத் துண்டித்தார். அதன்பின்னர் நிறைய பெண்களிடம் நான் ஜான் விஜய் குறித்து எச்சரித்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.