சபரிமலையில் நடத்தப்படும் மோசமான அரசியல், பரபரப்பை கிளப்பிய மாநில தலைவர்.!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான நடுத்தர வயது பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து சபரிமலை செல்லும் பாதையில் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .போராட்டத்தை மீறி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயலும் பெண்களுக்கு எதிராக சபரிமலை பக்தர்கள் போராட்டம் செய்ததால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநில அமைச்சர் கே.கே. சைலஜா பேசுகையில், பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சிலர் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றனர்.

சபரிமலையில் என்ன நடக்கிறது என்பதை என்னால் யூகிக்க முடியும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றவர்களால் தூண்டிவிடப்பட்டவர்கள். அவர்கள் வழக்கமான பக்தர்கள் என்று நம்மால் சொல்ல முடியாது. போராட்டத்தில் ஈடுபடவைத்து மோசமான அரசியல் நடைபெறுகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும்,” என்று குற்றம்சாட்டி கூறியுள்ளார்.

மேலும் பெண் பக்தர்களுக்கு ஆதரவாக தானும் சபரிமலை செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.