நடிகை கஸ்தூரி குறித்து டுவிட்டர் தளத்தில் தவறாக விமர்சித்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
கஸ்தூரியை ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அணுகி தங்கள் கட்சியில் இணையுமாறு வற்புறுத்தியதாக தகவல் வெளியானது.
ஆனால், நான் எந்த கட்சியிலும் இணையவில்லை என்று கஸ்தூரி மறுத்துவந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் படத்தை டுவிட்டர் முகப்பில் வைத்துள்ள ஒருவர், metoo என்ற ஹேஸ்டேக் மூலம் கஸ்தூரி தன்னை ஹொட்டல் அறைக்கு அழைத்து தொடும்படி சொன்னதாகவும் நான் மறுத்து விட்டேன் என்றும் பதிவிட்டு இருந்தார்.
இதனை, ரஜினிகாந்த் ரசிகர்களும் கண்டித்ததுடன், அந்த நபர் ரஜினி ரசிகராக இருக்க முடியாது என்று தெரிவித்தனர்,
அந்த நபருக்கு கஸ்தூரி டுவிட்டரில் பதிலடி கொடுத்தார். அவர் கூறும்போது, ‘அட பொய் சொல்லும்போது கூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால் முடியாதுதான். முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆக வேண்டும்.
ரஜினி பெயரை கெடுக்க இந்த மாதிரி எத்தனைபேர் அலைகிறார்களோ என்று கூறியுள்ளார்.
அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. ?அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் ! #கே_கூ
ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தினி பெரு அலையறானுவளோ ! ? pic.twitter.com/eEewaIxmu7
— Kasturi Shankar (@KasthuriShankar) October 16, 2018