முடங்கியது கேரளா: முழு அடைப்பு போராட்டம்! போலீஸ் குவிப்பு!
கேரளாவில் மாநிலம், சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் உள்ளே நுழைய இத்தனை வருடங்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிகள் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த மாதம் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்புக்கு பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனிடையே, நேற்று மாலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது.
மேலும்,பெண்கள் கோவிலுக்குள் செல்வதை எதிர்த்து, சபரிமலை பாதுகாப்பு கமிட்டி 12 மணிநேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.
இதையடுத்து, இன்று கேராளவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. போலீஸ்காரர்கள் அதிகமானோர் அங்கு குவிக்கப்பட்டனர்.