யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.சுகாதாரப் பிரிவினர் நேற்று (17 ) கல்லூரிக்குள் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
எனவே, உடனடியாக மாணவர்களை வெளியேற்றுமாறு கல்லூரி நிர்வாகத்தினருக்கு சுகாதரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.அதனை அடுத்து கல்லூரி முதல்வர் காய்ச்சலுக்கு உட்பட்ட மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
கல்லூரி நிர்வாகம் சுகாதாரத்தை சரியான முறையில் பேணாத காரணத்தால், மாணவர்களுக்கு வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.