பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே வரும்நிலையில் நடிகைகள் மற்றும் சராசரி பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக #metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.இதனை ன்பதாகி சின்மயி பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் திரையுலகமே மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து மீது சந்தியாமேனன் என்ற பெண் பத்திரிகையாளர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் வெளியிட்டார்.
அவரை தொடர்ந்து நடிகை சின்மயியும் அவர் மீது பாலியல் குற்றசாட்டை வைத்தார். இந்நிலையில் அதனை அப்பொழுதே கூறியிருக்கலாமே அதை ஏன் 14 வருடம் கழித்து இப்பொழுது கூறவேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்து வந்தன.
இவர்களின் இந்த கேள்விக்கு அப்போது எனக்கு தைரியமில்லை என்றும், தனி பெண்ணாக நான் என்ன செய்ய முடியும் என்றும் சின்மயி பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் மருமகளும், நடிகர் யுகேந்திரன் மனைவி ஹேமமாலினி தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழ் சினிமா சகோதரத்துவம் சின்மயி விவகாரத்தில் உடன் நிற்கவில்லை என்பதை என்னால் நம்பவில்லை!
சின்மயிடம் இந்த சம்பவம் குறித்து ஏன் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூறவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது . அந்த சந்தேகம் இப்பொழுது தீர்க்கப்படவேண்டும். சமுதாயம் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவனிடமே கேள்வி கேட்கிறது ஆனால் குற்றவாளியை எதுவும் கேட்பதில்லை.
நான் சன் மியூசியத்தில் இருந்தபோது, இளம் வயது கொண்ட பெண்ணிடம் நெருக்கமாக பழக வைரமுத்து முயற்சி செய்ததை நான் தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன் …
மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு பல மேடைகளில் இது குறித்து பேசியிருக்கிறேன்.
சின்மயியை பல குரல்களின் ஒரு குரலாகக் கருதுகிறேன்.அனைவரும் தங்களை சுயபரிசோனை செய்வதற்கான நேரம் இது என பதிவிட்டுள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.