சபரிமலைக்கு சென்ற ரஹ்னா பாத்திமா கேரளாவைச்சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சுரேந்திரனை பலமுறை மங்கலா புரத்தில் வைத்து சந்தித்து பேசியதாக கிஸ் ஆஃப் லவ் என்ற அமைப்பைச் சேர்ந்த ரெஷ்மி நாயர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எர்ணாகுளத்தைச்சேர்ந்த ரஹ்னா பாத்திமா சபரிமலைக்குக்கு கடும் எதிர்ப்பின் மத்தியில் சென்றதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக கிஸ் ஆஃப் லவ் அமைப்பைச்சேர்ந்த செயல்பாட்டாளர் ரஷ்மி நாயர் கூறினார்.
கிஸ் ஆஃப் லவ் அமைப்பில் ரஹ்னா பாத்திமா அங்கத்தினராக இருந்து செயல்படு வந்தார்.
சபரிமலை விஷயத்தில் ஒரு இன பிரிவினை வாதம் நடத்த்துவது தொடர்பான கூட்டுச்சதித்திட்டத்தின் பகுதியாகவே, ரஹ்னாவின் படங்கள் முகநூலில் மலை ஏறுவது அப்டேட் செய்யப்பட்டது என்றே கருதுகிறேன்.
மங்கலா புரத்தில் வைத்து பாரதியஜனதா கட்சி பிரமுகர் சுரேந்திரனுடன் பலமுறை ரஹ்னா பாத்திமா சந்தித்து பேசினார் என்பது எனக்கு முன்னரே தெரியும்.
“ரஹ்னா பாத்திமா என்ற மத்திய அரசு ஊழியர் கே. சுரேந்திரனை மங்கலா புரத்தில் பலமுறை சந்தித்து பேசியது எனக்கு நன்கு தெரியும் . கேரளாவின் பல இடங்களில் பல விஷயங்களில் தலையிட்டு, கேரளாவின் வலது சாரி இயங்கங்களுக்கு ஆதரவாக கொட்டேஷனுடன் இவர் செயல்பட்டார். சபரிமலை விஷயத்தில் ஒரு மாபெரும் இன பிரிவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான், சபரிமலை விஷயத்தில் ஆரம்பம் முதலே அவரது படங்கள் பேஸ்புக்கில் அப்லோடு செய்யப்பட்டது. அதுபோலவே மலை ஏறும் படங்களும். அய்யப்ப பக்தர்களை இஸ்லாமியர்கள் வெட்டி காயப்படுத்தினார்கள் என்று ஜனம் டிவியில் செய்தி வெளியானதும் இந்த நேரத்தில் கவனிக்கத்தக்கது. இந்த கூட்டுச்சதித்திட்டத்தில் கேரளா காவல்துறையில் “கிரிமினல் போலீஸ்” பட்டியலில் உள்ள ஐஜி ஸ்ரீஜ்ஜித் பங்கு என்ன என்று விசாரணை நடத்த வேண்டும்” என ரெஷ்மி நாயர் குறிப்பிட்டுள்ளார்.
தவிர, ரெஷ்மி கடந்த வருடம் இந்து மதத்துக்கு மாறியுள்ளார். தன்னுடைய முஸ்லிம் பெயரை மாற்றுவதற்கும் முயன்றுள்ளார்.
19.ம் தேதி காலையில் தான் சபரிமலைக்கு செல்வதற்கான தன்னுடைய திட்டத்தை முடிவு செய்து பம்பைக்குச்சென்றார். அவருடன் பத்திரிகையாளர் கவிதாவும் சென்றனர். தொடர்ந்து அவர்கள் காவல்துறை பாதுகாப்புடன் நடைப்பந்தல் வரை சென்றனர். அப்போது பெண்கள் கோயிலுக்கு வந்தால் கோயில் நடையை அடைப்போம் என தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்தார். மேல் சாந்திகள் பதினெட்டாம் படிமுன்பு அமர்ந்து பெரும் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர்கள் காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் பம்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.
ரஹ்னா பாத்திமா 13 ஆண்டுகள் வேத பாடம் படித்து வந்ததாக அவரது கணவர் மனோஜ் கூறினார்.
சபரிமலை விஷயத்தில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தவிர வேறெந்த லட்சியமும் சங்க்பரிவாருக்கு இல்லை என்கிறார் ரெஷ்மி நாயர்.
“அய்யப்ப பக்தர் என்றவகையில் பாதி வேஷம்போட்டு அன்றைக்கு ரெஹ்னா போட்டிருந்த புரொபைல் படத்தைப்பார்த்தாலே புரியும், இது சங்க்பரிவாரின் கொட்டேஷன் என்பதை நன்கு அறிந்துகொள்ளலாம். இன்றைக்கு கேரள அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் கூறியதைத்தான் நான் அப்போது சொன்னேன். சபரிமலை செயல்பாட்டாளர்கள். பார்ட்டி நடத்துவதற்குரிய இடமல்ல!” என்று குறிப்பிட்டுள்ளார் ரெஹ்மி நாயர்.
இதனிடையே ரெஹ்னா இதற்கு பதிலளித்துள்ளார்.
“ஆன்லைன் செக்ஸ் ராக்கெட் வழக்கில் முக்கிய குற்றவாளியும், மாடல் ரெஷ்மி நாயர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை நடைப்பந்தல் வரை ரெஹ்னா பாத்திமா நடைபந்தல் வரை சென்றிருந்தோம். ரெஷ்மி நாயர், என்னைப் பற்றி காவல்துறைக்கு தெரிவித்த கருத்துகளை வைத்துதான் என்னை மலையில் இருந்து கீழே அழைத்து வந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்க்கு முன்பு பா.ஜ.க. வைச்சேர்ந்த சுரேந்திரன் பேஸ்புக்கில் சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிப்பது குறித்து ஆதரவாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். இதில் தன்னைப்போல் பலரையும் டேக் செய்திருந்தார். எனக்கு அந்த ஸ்டேட்டசில் உடன்பாடு என்பதால் நானும் அந்த ஸ்டேட்டசை அக்சப்ட் செய்தேன். இதை வைத்து நான் சுரேந்திரனைப்பார்த்தேன், என்று சதித்திட்டம் தீட்டினேன் என்றும் ரெஷ்மி கூறியிருப்பது பொய். கொச்சி செக்ஸ் ராக்கெட் வழக்கி ரெஷ்மியும், ராகுல் பசுபாலனும் கைது செய்யப்பட்டபோது அவர்களுக்கு எதிராக நான் காவல்துறையில் வாக்குமூலம்கொடுத்ததற்காக என்னை இப்படி இப்போது பழிவாங்குகிறார். ” என்றார்.
ரஹ்னாவின் கணவர் மனோஜ் ஸ்ரீதரன் தயாரித்துவரும் “ப்ளிங்” என்ற சினிமாவுக்காக தேவைப்படும் பணத்துக்காகத்தான் அன்றைக்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ரெஷ்மியும், ராகுலும் காவல்துறையில் கூறியிருந்தனர். ஆனால் இதை ரஹ்னாவும், மனோஜும் மறுத்தனர்.
கிஸ் ஆஃப் லவ் இயக்கத்தில் இவர்களோடு தொடர்பில் இருந்ததாகவும் பின்னர் இவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல்தான் அதிலிருந்து விலகியதாக ரெஹ்னாவும், மனோஜும் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.