Operation “Wrath of God” ஐரோப்பாவிலும், மத்தியகிழக்கு நாடுகளிலும் இஸ்ரேலின் மொசாட் மேற்கொண்ட இரகசிய படுகொலை வேட்டையின் பெயர்.
மொசாட் மேற்கொண்ட அந்தப் படுகொலைகள் பலஸ்தீனர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.
இஸ்ரேல் மீதோ இஸ்ரேலியர்கள் மீதோ கைவைக்கத் தயங்குகின்ற ஒரு பயப் பீதியை மேற்குலக நாடுகளுக்கும் உருவாக்கி இருந்தது.
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பற்றிய ஒரு மிகப் பெரிய பிரமிப்பையும், அச்சத்தையும் அரபு தேசங்களின் புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்படுத்தியிருந்தது.
இன்றைக்கும் இஸ்ரேல் என்கின்ற சிறிய தேசம், இஸ்ரேலை எந்த நேரமும் விழுங்கிவிடக் காத்துக்கொண்டிருக்கும் அரபு தேசங்கள் மத்தியில் பிழைத்துக் கொண்டிருக்கின்றதென்றால், அதற்கு இருக்கின்ற பல காரணங்களுள் முதன்மையானது.
Operation “Wrath of God’ போன்ற தனது தொடர் நடவடிக்கையால் இஸ்ரேல் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற பியர் சைக்கோ தான். இது பற்றி இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி முழுமையாக பார்க்கின்றது.