அண்மைக்காலமாக மலையகத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதாக சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த பகுதியாக ராவணா நீர்வீழ்ச்சி உள்ளது.
பெய்து வரும் அடைமழையின் பின்னர் ராவணா நீர்வீழ்ச்சி மிகவும் தெளிவாக காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது.
இதனை பார்வையிட பெருந்தொகை சுற்றுலா பயணிகள் அந்தப் பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
எல்ல, வெல்லவாய வீதிக்கு அருகில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வீதியில் நின்றபடி நீர்வீழ்ச்சியை காண கூடிய சந்தர்ப்பம் பொது மக்களுக்கு கிடைத்துள்ளது.
ராவணா நீர்வீழ்ச்சி பகுதியில் பெருந்தொகை சுற்றுலா பயணிகள் நிறைந்திருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கையின் இயற்கை அழகை ரசிக்க பெருந்தொகை சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.