தெலுங்கானா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி உள்ளார்.
தெலுங்கானா சட்டப்பேரவையை அதன் ஆயுள் காலம் முடியும் முன்னரே தெலுங்கானா முதல்வர் கலைத்தார். அதை ஒட்டி தேர்தல் ஆணையம் வரவுள்ள டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவித்தது. தேர்தல் பிரசாரத்தில் தற்போது அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இட்டுபட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாவட்டத்தில் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள்ளார்.
நிர்மல் மாவட்டத்தில் பிரசாரக் கூட்டத்தில், “விவசாயிகள் இந்தியா முழுவதும் பெருமளவில் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். தங்கள் பயிர்களுக்கு நியாய விலை கிடைக்காததாலும், கடன் தொல்லையாலும் ஆயிரக்கணக்கான தெலுங்கானா விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.
இந்த விவசாயக்கடன்கள் ஒரே கட்டத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்யப்படும். பிரதமர் விவசாயிகளுக்கு ஒன்றும் செய்வதில்லை. அவர் ரபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு அளித்துள்ளார். அதன் மூலம் அவர் நாட்டின் காவலாளியாக இருக்க வேண்டியவர் கொள்ளைக்காரனாக மாறி உள்ளார்.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.