ஆண்களே! எங்களுக்கு துணை நில்லுங்கள்.. கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்ட சின்மயி!

பாடகி சின்மயி, கவிஞர் லீனா மணிமேகலை, நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சின்மயி உள்ளிட்டோருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சின்மயி, “யாரிடம் எப்படி புகார் அளிப்பது என்று இதுவரை எனக்கு தெரியவில்லை. மும்பை, ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள சினிமா துறை பெண்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். உடனே அதற்கு புகார் அளிக்க எண் மற்றும் இமெயில் முகவரியை கொடுத்துள்ளனர்.

ஆண்களே எங்களுடன் துணை நில்லுங்கள்

மேலும் சின்மயி தயவு செய்து கேட்கிறேன் நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வளவு நாட்கள் இத்தனை பெண்கள் பாலியல் பற்றி சொல்லி இருக்கிறார்கள். போகிற போக்கில் எல்லோரையும் அசிங்கப்படுத்த நாங்கள் இங்கே வரவில்லை. எங்களுக்கு கதை இருக்கிறது. நாங்கள் பாலியல் துன்புறுத்தளுக்கு ஆளாகி இருக்கிறோம். ஆண்கள் எங்களுடன் இருங்க என்றுதான் கெஞ்சுகிறோம். என்று செய்தியாளர் சந்திப்புடன் சின்மயி கேட்டுக்கொண்டார்.