தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு தமிழக அரசு சுமார் 1 கோடி வரை செலவு செய்ததாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் மதுரையை சேர்ந்த சையது தமீம் என்பவர் தகவல்களை பெற்றார்.
அவர் கூறுகையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆர்.டி.ஐ யில் 4 கேள்விகள் கேட்டிருந்தேன்.
ஜெயலலிதா எப்போது மரணம் அடைந்தார் என்ற கேள்விக்கு, 2016 செப்டம்பர் 5 என்று பதில் வந்தது.
அவர் சிகிச்சை பெற்றதற்கு அரசு எவ்வளவு செலவு செய்தது, என்ற கேள்விக்கு, சிகிச்சைக்கு அரசு செலவு செய்யவில்லை, மாறாக அவரது இறுதிச்சடங்கிற்கு ரூ 99,83,586 அரசு செலவு செய்ததாகவும், அவருடைய பென்சன் தொடர்பான விசயங்களை தலைமை செயலகம் கவனித்துவருதாகவும் தகவல் அளித்துள்ளது .
இந்த 4 கேள்விகளுக்குமான பதில் 60 நாட்களுக்கு பிறகு தான் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.