ஆபாசத்தின் உச்சத்தில் சன் குழுமம்! கலாநிதிமாறனின் நோக்கம்தான் என்ன?
முன்னணி தொலைக்காட்சிகள் ஒவ்வொன்றும் தனது வாடிக்கையாளர்களுக்கு போட்டிபோட்டுக்கொண்டு பல நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.
தனியார் தொலைக்காட்சிகள் (குறிப்பாக Vijay , சன் குழுமம்) வந்ததில் இருந்து, தமிழ் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. இதற்கு முழு காரணம் இன்றைய தொலைக்காட்சிகளில் நாகரீகம் என்ற பெயரில் மேற்கிந்திய பழக்கவழங்கங்களை இங்கு கொண்டு வந்து தமிழர்கள் மேல் திணித்தது.
குறிப்பாக விஜய் & சன் குழும தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா தொடர்களிலும், மற்ற நிகழ்ச்சிகளிலும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளே பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க கூடிய பல நிகழ்ச்சிகளில் தற்போது ஆபாசத்தை புகுத்தி விட்டனர்.
நெடுந்தொடர் என்ற பெயரில் கள்ள காதலை ஊட்டி வளர்க்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆபாசத்தின் உச்சம் எனலாம். தமிழ் கலாச்சாரத்தை தொடர்ந்து அழித்து வருவதில் விஜய் தொலைக்காட்சி, சன் குழும தொலைக்காட்சி, ஜீதமிழ் தொலைக்காட்சி ஆகியவை முன்னிடத்தில் உள்ளது.
ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு கவர்ச்சியும், ஆபாசத்தையும், கள்ள காதலையும் மக்கள் மீது திணித்து வருகிறார்கள்.
தொலைக்காட்சியில் வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும் என்று அனைத்து சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு தவறான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் வேளையில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே மண் பயனுற வேண்டும் என்று ஒற்றை குறிக்கோளில் விவசாயம், கலாச்சாரம், தமிழ் மொழி உணர்வு போன்ற நல்ல நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
ஆபாசத்தின் உச்சத்தை அடைந்த விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. இதையடுத்து பிக் பாஸ் 2 வும் ஒளிபரபரப்பட்டது. இந்த நிலையில், பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது SUN LIFE தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி என்ற புதிய ரியாலிட்டி சோவை தொடங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியானது பிரபல அமெரிக்கா தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவும் அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மையமாக வைத்து சன் டிவி இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது.
இதுவரை உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காப்பி அடித்துக்கொண்டிருந்த பிரபல டிவி தற்போது வெளிநாட்டு தொலைக்காட்சிகளை பின்தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற கேடுகட்ட நிகழ்ச்சிகளை வழங்கி மக்களையும், இளைஞர்களையும் நாசப்படுத்துவதே இந்த சன் குழுமத்தின் வேலையாகும்.
SUN LIFE தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில், மாடல் அழகிகள் 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் அவர்கள் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி போன்று ஒரே வீட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தி யார் அழகி என்று தேர்தெடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி நாட்டுக்கு தேவையான ஒன்றா?
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியின் முதல் எபிசோடிலேயே இது எப்படிபட்ட நிகழ்ச்சி என்பது தெரிந்து விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியை குடும்ப ரசிகர்கள் பார்க்க முடியாது என்று பலரும் குறை கூறிவந்த நிலையில் தற்போது அதற்கு போட்டியாக சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மிகவும் கவர்ச்சியில் எல்லை மீறி போய்கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக இந்த வாரம் வெளியிட்டுள்ள PROMO காட்சிகளும் மிகவும் கவர்ச்சியை கொண்டுள்ளது . எங்கு போகிறது இந்த நாடு…?