திருப்பதியில், சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று காலையில் இருந்து மாலை வரை 98,230 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.1 கோடியே 66 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகியிருக்கிறது. 52 ஆயிரம் பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருப்பதியில் இன்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருக்கும் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி, நாராயணகிரி பூங்கா வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரிசன வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு 20 மணி நேரமாகிறது.
தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவற்றை ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் வழங்கினர். ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் திருமலையில் இருக்கும் பல இடங்களிலும் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள்.