தொடரும் மீ டூ புகார் : நடிகர் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கடந்த சில வாரங்களாக இணையத்தில் வைரலாகி வருவது #MeToo என்ற ஹாஸ் டேக் தான். உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆகி வரும் இந்த ஹாஸ் டேக் பயன்படுத்தி பலர் இதுவரை தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகளை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக பிரபல பாடகி சின்மயி புகார் ட்விட்டரில் பதிவு செய்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், என் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் முழுக்க முழுக்கப் பொய்யானவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்

இந்நிலையில், மீ டூ வை பயன்படுத்து தொடர்ந்து பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்படம் மற்றும் நாடக படப்பிடிப்பு தளங்களில் பாலின வேறுபாடின்றி கலைஞர்களுக்கு மனஅழுத்தமோ, அச்சுறுத்தலோ இல்லாமல் சுதந்திரமாக கலையை செயல்படுத்தும் சூழலை தக்க வைத்துக் கொள்ளவும், பாதுகாக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாக கவனம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் நடிகர்கள் சுதந்திரமாக செயல்படுவதை கண்காணிக்க குழு ஒன்றை அமைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.