இன்று (21.10.2018) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் பேட்டியளித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது.
தினகரன் பேட்டி:
இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது, ”தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களோடு, கருணாஸ், கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு உள்ளிட்ட 23 எம்எல்ஏக்கள் என் பக்கம் உள்ளனர்.
ஆர்கே நகர் தொகுதியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் நடைபெறவில்லை. எங்களை பழி வாங்க நினைப்பதாக நினைத்து, 23 தொகுதிகளில் உள்ள மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் தமிழக அரசு செய்து வருகிறது.
கூட்டணி, முதல்வர்:
நிறைய கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றனர். யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்போம், சில கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைக்க மாட்டோம். தமிழக அமைச்சர்கள் தினகரனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிவித்துவிட்டு, மேடைக்கு மேடை எங்களை பற்றியே பேசுகிறார்கள். எங்கள் மீது பயம் வந்துவிட்டது.
நான் நினைத்திருந்தால் கடந்த டிசம்பர் மதம் 5 ஆம் தேதியே முதலமைச்சர் ஆகியிருப்பேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், எனக்கு ஆதரவாக உள்ள இந்த 21 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன்” என்று தினகரன் பேட்டியளித்துள்ளார்.