சபரிமலைக்கு சென்ற மாடல் அழகி, ஆவேசமாகி அவர் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை.!

சபரிமலைக்கு செல்ல முயன்ற மாடல் ரஹானா பாத்திமா, முஸ்லிம் ஜமாத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் ரெஹானா பாத்திமா.இவர் கேரளாவில் மத்திய அரசாங்க ஊழியராக பணியாற்றி வருகிறார். 2 குழந்தைகளுக்கு தாயான இவர் பெண் உடல்களை பாலியல் ரீதியாக அணுகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி புகழ்பெற்றவர்.மேலும் Kiss Of Love என்ற பிரச்சாரத்தை தொடங்கி தீவிரமாக இறங்கியவர்.ரஹானா தீவிர மரபுவழி முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மேலும், பெண்கள் தர்பூசணிப் பழம் தங்களது உடல் அழகை பகிரங்கமாக வெளிகாட்ட விரும்புகின்றனர் என்று ஒருவர் விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிர்வாணக் கோலத்தில் தர்பூசணி பழத்தின் வெட்டிய பாகத்தால் தனது மார்பழகை மறைத்தபடி படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் எந்த விரதமும் மேற்கொள்ளாமல் இடுமுடி கட்டிக்கொண்டு ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார். பின்னர் பக்தர்களின் போராட்டதால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இத்தகைய அவரது செயலால் இந்துக்களின் உணர்வுகளையும், சடங்கு, சம்பிரதாயங்களையும் அவர் காயப்படுத்தி விட்டார் என குற்றசாட்டு எழுந்தநிலையில் இஸ்லாம் மதத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தாரையும் தள்ளிவைப்பதாவும் எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமாஅத்-ஐ அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்லாமிய சமுதாயத்தின் பெயரை பயன்படுத்தும் உரிமையும், முஸ்லிம் ஜமாஅத்துடன் இனி எந்தவொரு தொடர்பும் அவருக்கு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.