“எட்டாக் கனியாகி விட்டதே….! விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….! வெளி வராத தகவல்கள்….!
மீ டூ விவகாரத்தில், தற்போது ஹாட் டாபிக்காகப் பேசப்படுபவர் வைரமுத்து தான். சின்மயி துவங்கி, திரைத் துறையில் உள்ள பல பெண்கள், அவர் மீது, தொடர்ந்து பாலியல் குற்றங்களைச் சுமத்தி வருகின்றனர். அவரைப் பற்றிய வெளி வராத பல தகவல்களைப் பற்றி தற்போது, தமிழ் திரைத் துறையினர், பகிர்ந்து வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், கண்ணதாசன் கவியரசர் என்று பட்டம் பெற்றார். அவரை விடத் தான் உயர்ந்தவன், என்று காட்டிக் கொள்வதற்காகத் தான், அவர் தனக்கு கவிப்பேரரசு என்று பட்டம் சூட்டிக் கொண்டார். இதற்காக, அப்போது, வைரமுத்து அரங்கேற்றிய நாடகம், திரைத் துறையில் பரவலாகப் பேசப்பட்டது.
தான், பாடல் எழுதும், திரைப் படங்களில், தன்னைத் தவிர, பிற கவிஞர்களை, பாடல் எழுத அனுமதிக்க மாட்டார். இப்போது, தன்னுடன் , தன் மகனுக்கும் வாய்ப்பு தர வற்புறுத்துகிறார்.
இது தவிர, வைரமுத்துவின், நீண்ட நாள் கனவாக இருந்தது, ஞானபீட விருது. இது இந்தியாவின், தலை சிறந்த இலக்கியத்திற்காக வழங்கப்படுவது. இந்த விருது, தமிழகத்தில், எழுத்தாளர் அகிலன், ஜெயகாந்தன் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.
இந்த விருதினைப் பெறுவதற்காக, அரசியல் பிரமுகர்கள் வழியாக பல்வேறு, அழுத்தங்களைக் கொடுத்து வந்தார், வைரமுத்து. தற்போது, அவரது இமேஜ், சரிந்து விட்ட நிலையில், ஞான பீட விருது, எட்டாக் கனியாகி விட்டதே, என்று, வைரமுத்து விரக்தியின் விளிம்பில் இருக்கிறார், என்று, சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.