நிபுணன் படத்தில் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன் நேற்று அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். 50 பேர் முன்னிலையில் ஷூட்டிங்கின்போது தவறாக நடந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையை இந்த சர்ச்சைக்கு அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது..
“படத்தில் காதல் காட்சிகள் படமாக்கப்படும்போது என்ன நடக்கும் என்பதும் எனக்குத் தெரியும். அத்தனை பேர் முன்னிலையில் என் தந்தை எப்படி அத்துமீறியிருக்க முடியும். அப்படி என் தந்தை தவறு செய்திருந்தால் படப்பிடிப்பின் போதே சொல்லியிருக்கலாமே. என் தந்தை அவுட்டிங் அழைத்ததாக வேறு ஸ்ருதி சொல்கிறார். அதற்கெல்லாம் என் தந்தைக்கு ஏது நேரம். அவர் பப்புக்கோ வேறு சொகுசு விடுதிகளுக்கோ போவதே கிடையாது,” என ஐஸ்வர்யா கூறியுள்ளார்.