கருவறுக்கப்படுகிறா வைரமுத்து..? எல்லாம் எதையோ மையப்படுத்தி நிகழ்கிறது!

பாலியல் அத்துமீறல் குறித்து கவிஞர் வைரமுத்து மீது புகார் அளிக்க நீதிமன்றம் மற்றும் காவல் நிலையத்தை நாடாதது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் சின்மயி சரியான விளக்கம் அளிக்காமல் உள்ளார்.

தொடர்ச்சியாக நடிகைகள் மற்றும் பிரபல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தாலும், இதில் பலர் ஆதாரங்கள் இருந்த போதிலும் ஏன் காவல் நிலையத்தையோ இல்லை நீதிமன்றத்தையோ நாடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே வரிசையில் தான் பாடகி சின்மயின் குற்றச்சாட்டும் இடம்பெற்றுள்ளது. எந்த வருடம் பாலியல் தொல்லை நடந்தது என்பதை கூற கூட பாஸ்போர்ட் இருந்தால் தான், அதில் உள்ள வருடத்தை பார்த்து சொல்ல முடியும் என்று கூறுகிறார்.

பாலியல் புகார்களுக்கு உரிய ஆதாரங்கள் உள்ளதா இதுவரை ஏன் நீதிமன்றத்தை நடவில்லை என்று சின்மயி கலந்து கொண்ட விழாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு செய்தியாளர் ஒருவரை தனியாக எழுந்துவரச்சொல்லி சத்தமிட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பஞ்சாயத்து செய்வதை முழு நேர தொழிலாக செய்து வந்த லட்சுமிராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பிலும் அதே வேலையை தான் செய்தார்.

ஒரு கட்டத்தில் செய்தியாளர்களின் அடுக்கடுக்காண கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாமல் திணறிப்போன சின்மயி எழுந்து நின்று கையெடுத்து கும்பிட்டார்

me too என்ற பெயரில் குற்றச்சாட்டு முன்வைப்பதால் அவமானத்துக்கு பயந்து பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களில் பிரபலங்கள் ஈடுபட தயங்குவர் என்று me too பதிவிடும் பெண்கள் நம்புகின்றனர்.

அதே நேரத்தில் பிரபலமான நபர்கள் மீது தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்தில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை சிலர் அவதூறாக தெரிவித்து வருகின்றனர்.

சின்மயி, லீனாமணிமேகலை, ஸ்ரீ ரஞ்சனி, என ஒருவர் கூட நீதிமன்றத்தையோ, காவல் நிலையத்தையோ ஏன் நாடவில்லை. ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறுபவர்கள் ஏன் துணிச்சலாக எதிர்கொள்ள தயங்குகின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.