வரதட்சணை தராததால் கல்யாணத்தை நிறுத்திய மணமகன்..! மாப்பிள்ளைக்கு மொட்டை போட்ட, பெண் வீட்டார்!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த மங்கள் சிங் என்பருக்கு இன்று திருமணம் நடக்க இருந்தது. இதனிடையே இவர் திருமணத்திற்கு 5 நாட்கள் முன்பாகவே வரதட்சணையாக மோட்டார் சைக்கிள், தங்கச் செயின் வேண்டும் என்று மணமகள் வீட்டாரிடம் மங்கள் சிங் கேட்டு உள்ளார்.

ஆனால், பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்க மறுத்தனர். இதனால், திருமணத்தை நிறுத்துமாறு மணமகன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகளின் உறவினர்கள், மணமகனைப் பிடித்து, மொட்டையடித்துள்ளனர். வரதட்சணை கேட்ட மணமகனுக்கு மொட்டை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.