சென்னை., கொளத்தூரை அடுத்துள்ள தணிகாசலம் நகரில் உள்ள பொன்னியம்மன் மேடு பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ்குமார். இவரின் மனைவியின் பெயர் கெஜலட்சுமி. இவர்களின் இரட்டை குழந்தைகளான தக்சன் (வயது 6) ., தீக்சா (வயது 6). இவர்கள் இருவரும் காய்ச்சலால் அவதிபட்டு வந்த நிலையில் இவர்களை மருத்துவமனையில் அனுமதித்த போது இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் எழும்பூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்., இன்று பரிதாபமாக இருவரும் உயிரிழந்தனர். இவர்களின் இறந்த செய்தியை கேட்டு அந்த பகுதிமக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கையில்., அமுதம் அங்கன்வாடியில் நான் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன்., எங்களுக்கு திருமணம் முடிந்து 5 வருட காலமாக குழந்தைகள் இல்லை., இதன் காரணமாக கெஜலட்சுமி மருத்துவரின் ஆலோசனையில் சிகிச்சை பெற்றார்., அது போதாதென்று கோவிலுக்கு சென்றும் பிள்ளை வரம் வேண்டி பெற்றெடுத்த குழந்தைகள்.
இருவரும் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., இவர்களுக்கு சென்ற வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இது குறித்து மருத்துவமனை சென்று வந்துகொண்டிருதோம்., பின்னர் இவர்களின் இரத்த மாதிரியை சோதனை செய்த மருத்துவர்கள் இவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக கூறினார்.
இதன் காரணமாக இவர்கள் இருவரும் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி செய்தோம். சிகிச்சைக்கு பின்னர் இவர்கள் இருவரும் மீண்டு வந்து வைத்துவிடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்ததை எங்களால் இன்னும் நம்ப இயலவில்லை.இந்த செய்தியை கேட்ட எனது மனைவி மயங்கினார்.
இவர்களுக்கு அந்த பகுதி மக்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் சோகத்துடன் காணப்பட்டது.