அண்ணனோடு காதல், விடிந்ததும் திருமணத்தை வைத்து கொண்டு மணமகள் செய்த செயல், பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவு.!

விடிந்ததும் திருமணத்தை வைத்துக்கொண்டு நள்ளிரவில் சகோதர முறை கொண்ட தனது காதலனுடன் மணப்பெண் ஊரை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சின்னமசமுத்திரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஞானசேகர். இவரது மகள் பிரியங்கா, இவர் அப்பகுதியிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி படித்து வருகிறார்.

இந்நிலையில் பிரியங்காவிற்கும் அதேபகுதியை சேர்ந்த மனோஜ்குமார், என்பவரும் நெடுநாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதல் விவகாரம் சமீபத்தில் பிரியங்காவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

ஆனால் மனோஜ் குமார் பிரியங்காவிற்கு சகோதர முறை என்பதால் பிரியங்காவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் பிரியங்கா அவர்களை பொருட்படுத்தாமல் மனோஜ் குமாருடன் பேசிவந்ததால் அவரது பெற்றோர்கள் அவசரஅவசரமாக முல்லைவாடி பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகன் பிரகாஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அப்பொழுது மகிழ்ச்சியாக இருந்த பிரியங்கா, நள்ளிரவு 2 மணிக்கு யாருக்கும் தெரியாமல் மனோஜ்குமாருடன் ஊரைவிட்டு ஓடியுள்ளார்.

இந்நிலையில்அதிகாலை மணமகள் ஓடிபோன தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின்னர் அவசரமாக மற்றொரு உறவினர் பெண்ணிடம் பேசி அவரை மணமகனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.