அதிசயம் நிறைந்த கோவில்! தலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்!!

இந்தியாவில் உள்ள பல முக்கிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் உள்ளது. அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் நிகழ்ந்துவருகிறது.

1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோவிலும், கட்டிடக்கலையும், பல மர்மங்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது.

உலகம் வியக்கும் கட்டிடங்களில் ஒன்றுதான் சிறப்புமிக்க விருபாட்சர் கோவில். இந்த புகழ்பெற்ற கோவில், கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில் ஹம்பி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

ஏழாம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட இந்த கோவில் பெங்களரில் இருந்து சுமார் 350 கி.மீ தூரத்தில் உள்ள ஹம்பி என்ற இடத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் இக்கோவில் உள்ளது.

இந்த கோவிலின் ராஜ கோபுரம் சுமார் 165 அடி உயரம் உறையாது. இதன் நிழல் ஒரு சுவற்றில் இங்கு தலை கீழாக விழுகிறது. இந்த அதிசய நிழலின் ரகசியம் இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.