ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊருக்கு அடுத்துள்ள பகுதி சிலேட்டர்ப்புரம். இந்த பகுதியில் உள்ள தமிழ்நகரை சார்ந்தவர் ராபர்ட். இவரின் மனைவியின் பெயர் திலகவதி. இவர்களுக்கு சுராக்சா என்ற 7 வயது மகளும்., பிரவேஷ்குமார் என்ற 7 வயது மகனும் உள்ளனர்.
பெருந்துறையில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றிவருகிறார் ராபர்ட். இவரின் மனைவியான திலகவதி அந்த பகுதியில் உள்ள சுரேஷ்குமாரின் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை நடந்துள்ளது. இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்துவந்துள்ளார் திலகவதி.
இந்நிலையில்., இவரின் கணவர் வேலைக்கு சென்றவுடன் மனவிரக்தியில் இருந்த திலகவதி எலிமருந்தை உட்கொண்டுள்ளார்., தயார் செய்வதை கண்டுகொண்டிருந்த அவரின் குழந்தைகளை தனக்கு பின்னர் கவனிக்க ஆளில்லாமல் அவதியடைவார்கள் என்று., மனமுடைந்த நிலையில் இருவருக்கும் எலிமருந்தை வழங்கியுள்ளார்.
எலிமருந்தின் வீரியத்தில் மூவரும் மயங்கிய நிலையில்., இவர்களின் இல்லத்தில் ஆள்நடமாட்டமில்லாததை கண்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று சோதனை செய்கையில்., இவர்கள் மயங்கிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்று அவசர ஊர்திக்கும்., காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்., மேலும் இந்த சம்பவம் குறித்த தகவலை அவரின் கணவருக்கு தெரிவித்தனர்.
இவர்கள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்., இவர்களின் பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இவரின் மற்றொரு மகன் மற்றும் திலகவதி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.