ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் உயர் அதிகாரி கைது!

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சற்று நேரத்திற்கு முன்னதாக குறித்த உயர் அதிகாரியை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் கணக்கியல் பிரிவின் பிரதம அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு சொந்தமான 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வேறு கணக்கு ஒன்றில் வைப்புச் செய்ய முயற்சித்தமை குறித்து அண்மையில் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அண்மையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டித் தொடருக்கான ஒளிபரப்பு உரிமை பெற்றுக் கொள்வது தொடர்பில் கிடைக்கப் பெற்ற பணமே இவ்வாறு துஸ்பிரயோகம் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் விசாரணை நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.