பெண்ணின் கர்ப்பத்திற்கு நான் காரணமல்ல: அவர்கள் தான் காரணம்! அமைச்சர் பேட்டி

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சிபாரிசு கேட்டு சென்ற இளம்பெண்ணை கர்பமாக்கியதாக எழுந்த புகாருக்கு தற்போது மறுப்பு தெரிவித்து பேட்டியளித்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சிபாரிசு கேட்டு சென்ற சிந்து என்ற இளம்பெண்ணை கர்பமாக்கிவிட்டு, அந்த பெண்ணின் கர்ப்பத்தில் வளரும் குழந்தையை கலைக்க உதவுகிறேன் என பேசும் ஆடியோ ஒன்று நேற்று முதல் இணையம் முழுவதையும் ஆட்கொண்டது.

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார்.

அப்போது பேசிய அவர், வாட்ஸ் ஆப்-பில் வெளியான ஆடியோ-வில் உள்ளது எனது குரல் அல்ல. என் மீது களங்கம் கற்பிக்கவே போலியான ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

அதன் பின்னணியில் சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினர் உள்ளனர். என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்களின் செயல் அது.

தொடர்ச்சியாக அவர்களை நான் துணிவுடன் எதிர்த்து பேசி வருவதால் இப்படி செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் குரல் மாதிரி சோதனைக்கு கூட நான் தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

பின்னர் இணையத்தில் பரவும் மருத்துவ சான்றிதழ் குறித்து பதிலளித்த அமைச்சர், இணையத்தில் எனது பெயர் தாங்கி வந்த பிறப்பு சான்றிதழ் போலியானது. உலகத்தில் டி.ஜெயக்குமார் என்று நான் ஒருவன் மட்டும்தான் இருக்கிறேனா? இதுகுறித்து சட்டப்படி வழக்கு தொடரப்படும் என பதிலளித்துள்ளார்.

எப்பொழுதும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மகிழ்ச்சியுடன் பேசும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஏன் இவ்வளவு பதற்றமாக பேசுகிறார் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.