நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி இவருக்கு சரியா ஒத்துப் போயிருக்கு. மைக் குமார் சும்மாவே மீடியாவைக் கூப்பிட்டு கிண்டலடிப்பார்.
இப்ப அவர் முகத்தில் ட்ரேட் மார்க் சிரிப்பு மிஸ்ஸிங்’ என்று தினகரன் தரப்பினர் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்து வருகின்றனர். நேற்று ஆடியோ குறித்து விளக்கம் அளிக்கும் போது இதனை கண்கூடாக காண முடிந்தது.
மீடியாக்கள் முன்பு தடால் புடாலாக தோன்றி வார்த்தை கணைகளை அள்ளி வீசுவார். சில நாட்களுக்கு முன்பு கூட ‘நான் மைக் குமார் இல்லை. மைக்டைசன்.
அடித்தால் ஒரே அடியில் நாக் அவுட் தான்’ என்று கூறியவர், நேற்று ஒரு நாள் முழுவதும் நாக் அவுட் ஆகி வீட்டிலேயே முடங்கியிருக்கிறார்.
எனக்கு பாக்சிங் எல்லாம் தெரியும், இப்போது சண்டை வைத்தால் கூட தினகரனை வென்று விடுவேன் என்று கூறினார்.
இந்த அரசியல் களம் சண்டை போடுவதற்கல்ல, நுண்ணறிவை வெளிக்காட்டி ஒருவரை ஒருவர் வீழ்த்துவது தான் இன்றைய அரசியல் என்பதை புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டார்.
ஜெயக்குமார் ஆடியோவை கேட்ட முதல்வர் எடப்பாடி தரப்பும் ஆடிப்போயுள்ளது. எப்படியாவது அந்த ஆடியோவில் இருக்கும் குரல் ஜெயக்குமாருடையது இல்லை என்று முடிந்த வரை நிரூபிக்க பார்ப்பார்கள். ஆனால் அதற்கு மேலும் ஆதாரம் தினகரன் தரப்பிடம் கைவசம் உள்ளது.
மேடைக்கு மேடை அமமுக கட்சிக்கு கவ்ண்டர் கொடுக்கிறேன் என்ற பெயரில் சில ;நறுக்’ வார்த்தைகளை அள்ளி வீசினார் ஜெயக்குமார்.
அப்போதே வெற்றிவேல் இதற்கு மேல் பேசினால் அசிங்கப்பட்டு விடுவீர்கள் என்று எச்சரித்தார். அதனையும் மீறி பேசினார்.
அப்போது ஒரு பேட்டியில் ‘ எம்.பி ஒருவருக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கு’ என்று நாசுக்காக சொல்லி பார்த்தார் வெற்றிவேல்.
ஒரு கட்டத்தில் எதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் அடங்கவில்லை என்பதால், தான் இந்த அதிரடி ஆடியோ ரிலீஸ் என்று கூறுகின்றனர்.
இதற்குப் பிறகும் அடங்கவில்லை என்றால், அடுத்தகட்டமாக இன்னும் சில ஆடியோ பதிவுகள், வீடியோ பதிவுகள் எல்லாம் இருக்கின்றன.
அடுத்தடுத்த அம்புகள் பாயும்’ என்று அடுத்த வெடியை லேசாக புகைய விட்டுள்ளனர் தினகரன் தரப்பினர்.