14 வயது சிறுமிக்கு, குழந்தை கொடுத்த காதலன் கைது!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வானன் (20), இவர் கூலித் தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். அப்போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை பலமுறை இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நடந்தவற்றை சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.

இதனை கேட்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகளின் நிலைக்கு காரணமான காதலன் தமிழ்வாணனை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் தமிழ்வாணன் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த தமிழ்வாணனை கைது செய்துள்ளனர்.