கவிஞர் வைரமுத்து பற்றி சில பாடகிகள் தன்னிடம் புகார் கூறியதாக ஏ.ஆர்.ரகுமான் சகோதரியும், இசையமைப்பாளருமான ரைஹானா அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
சமீபகாலமாக நடிகைகள் மற்றும் பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திரையுலகமே மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து மீது சந்தியாமேனன் என்ற பெண் பத்திரிகையாளர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டுவீட் ஒன்றை வெளியிட்டார்.
அவரை தொடர்ந்து நடிகை சின்மயியும் அவர் மீது பாலியல் குற்றசாட்டை வைத்தார். இதனால் திரையுலகமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது.
பாலியல் தொல்லைக்கு உள்ளாபவர்கள் சமூகவலைத்தளத்தில் குற்றம்சாட்டுவது, தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க ஒரு இணைய நீதி முறையை உருவாக்க வேண்டும் என இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
பாடகி சின்மயி கூறும் புகாருக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், யார் பாலியல் ரீதியான கஷ்டங்களை எதிர்கொண்டார்களோ..? அவர்கள் நிச்சயம் இதுகுறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டும் என கூறினார்.
மீடூ இயக்கம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர் ரஹ்மான் இந்த இயக்கத்தை கவனித்து வருவதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சிலரின் பெயர்கள் தமக்கு அதிர்ச்சியளித்ததாகவும் கூறியுள்ளார்.
திரைத்துறை பெண்களை மதிக்கும் துறையாக மாறுவதை காண விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுகளுடன் முன்வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஆதரவு கிடைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.