பட்டாசுக்கு தடை? உச்ச நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு!!

இந்தியா முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வெளியிட இருக்கிறது.

காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்துவதற்கு, இந்தியா முழுவதும் பட்டாசுகளின் உற்பத்திக்கு தடை விதிக்க கோரியும், பட்டாசு விற்பனைக்கு தடை கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தது.

இதனை மனுவை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, இதனுடைய தீர்ப்பு இன்று வெளியாகும் என தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு இருக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை, நாட்டு மக்கள் 130 கோடி பேரின் ஆரோக்கியம் தொடர்பான உரிமை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தாங்கள் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டியிருப்பதாக நீதிபதி குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக , பட்டாசுக்கு முழுவதும் தடை விதிக்கக் கூடாது, கடுமையான நடைமுறைகளுடன் பட்டாசை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகலாம் என தெரிகிறது.