பாலியல் புகாரில் சிக்கித் தவிக்கும் வைரமுத்துவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் பேச மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைரமுத்து மீதான புகார்களை கேட்டு அதிர்ச்சியில் இருந்தாராம் ஏ.ஆர்.ரஹ்மான், இதுகுறித்து அவரது சகோதரியும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
பெண்கள் பலரையும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறியே வைரமுத்து இச்செயலில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கேள்விப்பட்டதும் கோபத்தில் இருக்கும் ரஹ்மான், வைரமுத்து போனில் அழைத்த போதும் பேச மறுத்து விட்டதாக தெரிகிறது.
அவரது உதவியாளர்களை வைரமுத்து அழைத்த போதும் ரஹ்மானை வைரமுத்தால் ரீச் ஆக முடியவில்லையாம்.
தற்போதைய சூழலில் சர்ச்சைக்குரிய வைரமுத்துவிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று ரஹ்மான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.