வீட்டு வாசலில் எந்த நாளில் விளக்கு ஏற்றினால் செல்வம் கொட்டும் தெரியுமா?

நமது வீட்டில் விளக்கு வழிபாடு செய்வதன் மூலம் தெய்வீகப் பேரொளியும், லட்சுமி கடாட்சமும் ஒன்று சேரும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.

இதனால் பெண்கள் காலையில் எழுந்ததும் இஷ்ட தெய்வத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்து வருகிறார்கள். இதனால் அவர்களின் மனதில் ஒருவித புதிய உற்சாகமும் பிறக்கும்.

விளக்கு வழிபாட்டின் சிறப்புகள்
  • விளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருளுவதால், விளக்கு ஏற்றுவதன் மூலம் முப்பெரும் தேவியர்களின் திருவருளை ஒன்றாக பெற முடியும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.
  • எனவே நமது வீட்டில் தினமும் விளக்கு வழிபாடு செய்து வருவதால் அது சுற்றுப்புற இருளைப் போக்கி, நம் மனதில் உள்ள இருளையும் அகற்றுகிறது.
செல்வம் அதிகரிக்க எந்நாளில் விளக்கு ஏற்ற வேண்டும்?
  • ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் நம் வீட்டு வாசலில் மாக்கோலம் போட்டு, அதன் நடுவில் விளக்கை ஏற்றி வைத்து, வீட்டு பூஜை அறைக்குள், அந்த விளக்கைக் கொண்டு வந்து வைக்க வேண்டும்.
  • இதனால் விளக்குடன் மகாலட்சுமியும் நம் வீட்டிற்குள் வருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எனவே நம் வீட்டில் காலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கு ஏற்றி, வருவதால், நம் வாழ்க்கை ஒளிமயமாகும்.
  • விளக்கு வழிபாட்டை தினந்தோறும் கடைப்பிடிக்கும் இல்லங்களில் தெய்வபலம் பெருகி, தீய சக்திகள், செய்வினைகள், திருஷ்டிகள் போன்று எவ்வித கெட்ட சக்திகளும் அண்டாது.
விளக்கு வழிபாட்டில் பின்பற்ற வேண்டியவை
  • விளக்கு வழிபாடு செய்யும் போது, பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும்.ஏனெனில் பசுநெய் தீபத்தில் அம்பாள் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. எனவே அவ்வாறு ஏற்றும் போது, சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.
  • விளக்கு ஏற்றும் போது, அதில் உள்ள எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும்.
  • எனவே விளக்கை ஏற்றியதிலிருந்து குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
  • விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை வீசி அல்லது வாயால் ஊதி அணைக்கக் கூடாது. சாஸ்திரத்தின் படி, பஞ்சபூதங்களாக நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் நாம் வழிபடுவதால், ஒன்றால் ஒன்றை அணைக்கக் கூடாது.
  • எனவே தீபத்தை பூக்களால் சாந்தப்படுத்தி அணைக்க வேண்டும். ஆனால் இதை பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டும்.