இந்த நவநாகரீக காலத்திலும் மாதவிடாயைக் காரணமாக வைத்து பெண்களை வீட்டுக்குள் விடாமல் மாட்டுக் கொட்டகையில் அடைக்கும் கொடுமை குலு மணாலியில் நடைபெற்று வருகிறது.
மாதவிடாய் வீட்டைத் தீட்டுப் படுத்திவிடும் என்ற மூட நம்பிக்கையில், பெண்களை மாட்டு மூத்திரத்தின் நாற்றமும் சாணம் நிறைந்த தரையும் கொண்ட மாட்டுக் கொட்டகையில் அடைத்து விடுகின்றனர் இங்குள்ள மக்கள்.
தங்கள் சொந்த வீடுகளுக்குள்ளோ, கோவில்களுக்குளோ மட்டுமல்ல, தங்கள் வீட்டு கழிவறைகளுக்குள் கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது இன்னும் கொடுமை. இதனால் பெண்கள் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வெளியிடங்களுக்கு செல்லும்போது பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகும் ஆபத்தும் உள்ளது.
மாதவிடாய் காலத்தில் மாட்டுத் தொழுவத்திற்கு அனுப்பப்படும் இந்திய பெண்கள் ?? pic.twitter.com/rLVZd9ZerB
— BBC News Tamil (@bbctamil) October 23, 2018
இதனால் குலுவிலுள்ள அரசு அதிகாரி ஒருவர் இந்த வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
குலுவில் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் அந்த அதிகாரியை சந்தித்து பெண்களுக்கு என தனியாக கழிவறைகள் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
எல்ல வீடுகளிலும் கழிவறை உள்ளதே, அப்புறம் எதற்காக தனிக் கழிவறை என்று அவர் கேள்வி எழுப்பியபோதுதான் அவருக்கு இப்படி ஒரு வழக்கம் அங்குள்ள கிராமங்களில் இருப்பதே தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்துதான் அவர் இந்த பிரச்சாரத்தை முன் வைத்துள்ளார்.
இதில் ஒரு விந்தை என்னவென்றால், ஆண்கள் எல்லோரும் இந்த மாற்றத்தை வரவேற்றுள்ள நிலையில், முதிர் வயது பெண்கள் இது தங்கள் மதத்துடன் தொடர்புடைய வழக்கம் என மாற்றத்தை எதிர்க்கின்றனர்.
இதனால் கோயில் பூசாரிகள் போன்றோரை சந்தித்து பிரச்சாரங்களுக்கு அவர்களையும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் அந்த அதிகாரி. பிரச்சாரங்கள் தொடர்கின்றன என்றாலும் மாற்றங்கள் வர சில காலம் ஆகலாம் என்றே தோன்றுகிறது.