புத்தளம் பகுதியிலுள்ள கடற்பகுதியில் கடல்நீர் சிவப்பாக மாறியமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
புத்தளம் களப்பிற்கு சொந்தமான சேருக்குளிய பகுதியிலுள்ள கடல்நீர் இன்று அதிகாலை சிகப்பு நிறமாக மாறியுள்ளது.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் நிர்மாணிப்பு நடவடிக்கை காரணமாக அங்குள்ள குப்பைகள் அடித்துச் சென்றமையினால் இவ்வாறு சிகப்பு நிறமாக மாறியுள்ளது.
நேற்று இரவு அருவன்காடு குப்பை மேட்டு பிரதேசத்தில் பெய்த அடைமழையினால் குப்பை மேட்டு பகுதியில் நீர் நிறைந்து அது களப்பிற்கு அடித்துச் சென்றுள்ளது.
இதனால் களப்பு நீர் முழுவதும் சிகப்பு நிறமாகியுள்ளது.
இந்த குப்பை மேட்டிற்கு எதிராக அந்த பகுதி மக்கள் இதற்கு முன்னரும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
எனினும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமையினால் அசுத்தமான நீர் களப்பிற்கு சென்று சேர்வதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.