5 வயது சிறுவனுடன் ரயில் முன்பு குதித்த வெளிநாட்டவர்!

ஜேர்மனியில் இந்திய புகலிட கோரிக்கையாளர் இளைஞர் ஒருவர் 5 வயது சிறுவனை கடத்திச் சென்று ரயிலுக்கு முன்பு குதித்த விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணை துவங்கியுள்ளது.

கொலைக் குற்றம், சிறுவனை கடத்தியது உள்ளிட்ட பல பிரிவுகளில் அந்த இளைஞர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஜேர்மனியின் வுப்பர்ட்டால் நகரின் முக்கிய ரயில் நிலையத்தில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரயில் பயணத்திற்கு என காத்திருந்த ஜேர்மன் குடும்பத்தின் சாண்ட்ரோ என்ற 5 வயது சிறுவனை திடீரென்று அள்ளிச் சென்ற எஸ்.ஜகதீஷ் என்ற இளைஞர் பாய்ந்து வந்த ரயிலுக்கு முன் குதித்துள்ளார்.

ஆனால் ரயில் மிகவும் மெதுவாக வந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மட்டுமின்றி சிறுவனின் தந்தை இளைஞரின் பின்னால் துரத்திச் சென்று சிறுவனை மிட்டுள்ளார்.

மேலும் அங்கிருந்த பொலிசார் ஜகதீஷை உடனடியாக கைது செய்துள்ளனர்.

புகலிட கோரிக்கை நிராகரித்ததன் காரணம் ஏற்பட்ட மன உளைச்சலே ஜகதீஷை இந்த கொலை முயற்சிக்கு தூண்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.