இந்தியாவில் திருமணம் ஆன சில மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பதஷாயி பகுதியை சேர்ந்தவர் திலீப்நாத். இவருக்கும் பரி (18) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
பரியின் பெற்றோர் மேற்கு வங்கத்தில் உள்ள கோபிபல்பூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பரி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார்.
இதையடுத்து வலியால் துடித்த அவரை குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரி உயிரிழந்தார்.
தற்கொலை முடிவை பரி எடுத்ததன் காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.