மஹாராஷ்டிர மாநிலத்தில் மும்பை விக்ரோலி பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் புறநோயாளி பிரிவில் ஊழியராக பணியாற்றி வருபவர் அஜிங்கே (வயது 25).
இந்த மருத்துவமனையில் சென்ற 2014 ம் வருடம் டிசம்பர் மாதத்தில் 15 வயதுடைய சிறுமி உடல் நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் அங்கு ஊழியராக பணியாற்றும் அஜிங்கே சிகிச்சை எடுத்துக்கொண்டு அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் அறைக்குள் சென்றார். அவரைக்குள் சென்ற அஜிங்கே சிறுமியுடன் யாரும் இல்லை என்பதால் அவரை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்
அந்த சிறுமியின் ஆடைகளை அகற்றுவதை கண்ட சிறுமி., தன்னை விட்டுவிடுமாறு அவரிடம் கதறியும் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
சிறுமியின் தாயார் வந்தவுடன் தனக்கு நிகழ்த்த சோகத்தை கூறி அழுதுள்ளார்., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்று கொண்ட காவல் துறையினர் உடனடியாக அவரை கைது செய்து., அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கானது மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தற்போது., அந்த ஊழியருக்கு 5 வருட சிறை தண்டனை அறிவித்து தனது தீர்ப்பை வெளியிட்டார்.