நாய்களுக்கு கேமரா பொருத்தம்.! குற்றங்களை கண்டுபிடிக்க அதிரடி நடவடிக்கை!

குற்றம் நடந்த இடத்தில் துப்பறிவதில் போலீஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை குற்றவாளிகளை, கண்கள், மூக்கு மூலம் மோப்பம் பிடித்து கண்டறிந்து வெளிப்படுத்துகின்றன. தற்போது போலீஸ் மோப்ப நாய்களுக்கு கேமரா பொருத்தி துப்பறியும் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தமுறை அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்படுகிறது.

அதன் படி நாய்களின் இடுப்பில் கேமராக்கள் பொருத்தப்படும். போலீசார் இருந்த இடத்தில் இருந்தே அந்த கேமராவில் பதிவாகும் வீடியோ காட்சிகளை பார்க்க இயலும். இதன் மூலம் மோப்ப நாய்களின் நடவடிக்கைகளை ஒரு இடத்தில் இருந்தபடியே எளிதில் கண்காணிக்க முடியும்.

இது தற்போது, அமெரிக்க போர்ட்லேண்ட், ஒரிகன், விஸ்கான்சின் ஆகிய இடங்களில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.