காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் விமானநிலையத்தில் தாக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஆன அவர் கடப்பா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் காங்கிரசில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர்.
தந்தையின் மறைவிற்கு பிறகு காங்கிரசில் இருந்து பிரிந்து தனியாக கட்சி நடத்தி வந்த அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆந்திர மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
இந்நிலையில் சற்றுமுன் அவர் விசாகப்பட்டினம் விமானநிலையம் சென்ற போது அங்கே அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.