தனியாக செல்லும் போது, மிளகாய் பொடி எடுத்து சென்ற நடிகை!

இந்திய முழுவதும் மீடூ விவகாரம்தான் அதிகம் பேசப்படுகிறது. இந்த மீடூ விவகாரம் வைரமுத்துவிடம் துவங்கி, அர்ஜுன் என பலர் நடிகர் மீதும் பாலியல் புகார் கூறியுள்ளனர்.

மீடூ விவகாரம் குறித்து மும்தாஜ் அளித்த பேட்டி ஒன்றில், மீடூ என்ற பெயரில் சினிமா துறையில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் கூறிவருகின்றனர். தனியா வாங்க, உங்கக்கிட்ட பேசணும் என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்க வேண்டும். இதேபோல் என்னிடம் தனியே வரச்சொல்லி பலமுறை பலரும் சொல்லியிருக்கிறார்கள். நான் அப்படி தனியாக செல்வதை தவிர்த்து விட்டான்.

சில விழாக்களுக்கோ, படப்பிடிப்புக்கோ நான் மட்டும் தனியா போகக்கூடிய தருணங்களில், என்னுடைய அம்மா, என்னை பாதுகாத்துக் கொள்ள மிளகாய் பொடியை ஒரு பேப்பரில் மடித்து, என்னிடம் கொடுத்தும் அனுப்புவார்கள். தப்பா ஏதாவது நடந்துச்சுன்னா, உடனே மிளகாய் பொடியைத் தூவிடுன்னு செல்லுவார்கள். அப்போதெல்லாம், பெப்பர் ஸ்ப்ரே வரவில்லை. எப்போதும் என் ஹெண்ட் பேக்கில் மிளகாய் பொடி இருந்து கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார் மும்தாஜ்.