அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஊடகங்கள் முன்னிலையில் சில முக்கிய தகவல்களை உளறிக்கொட்டியதால் அதிமுகவினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இன்று திண்டுக்கல் அருகே நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், அதிமுக தொண்டர் ஒருவர், தற்போதைய அதிமுக ஆட்சியில் வருமானமே பார்க்க முடிவதில்லை. 1000 ரூபாய்க்கு கூட வழியில்லை என்று கூறியிருக்கிறார்.
அதற்கு ஊடகங்கள் முன்னிலையிலேயே, ‘அதுதான் ஓட்டுக்கு பணம் வாங்கினீங்கல’ என்று நேரடியாக பேசினார்.
வாக்களிக்க பணம் கொடுக்கபட்டதை அப்படியே ஊடகங்கள் மத்தியில் சொன்ன அமைச்சரின் அறியாமையை கண்டு சுற்றி இருந்த தொண்டர்கள் பேச்சு மூச்சின்றி காணப்பட்டனர்.
இதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு, திண்டுக்கல் ஆட்சியரோடு கலந்துகொண்ட ஒரு விழாவில், அதிமுக பிரமுகர் ஒருவர் சத்துணவு பணியாளர் பதவிக்கு Aஆட்களை நியமனம் செய்வது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, என்னய்யா நீ தனியா வந்து பார்த்து சொல்ல வேண்டியதா கூட்டதுல சொல்ற’ என்று பிராங்க்காக பேசினார்.
இப்படி அதிமுக குறித்த சில இரகசியங்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுவெளியில் உடைத்து வருவது கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.