மேட்ரிமோனியல் வரை சென்ற சிந்து.. அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோவில் பேசிய பெண் யார் தெரியுமா..?

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி ஆளும் கட்சி அரசியலில் புயலை கிளப்பியுள்ள நிலையில், அந்த ஆடியோவில் பேசிய பெண் குறித்த விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளது.

அந்த பெண்ணின் நலன் கருதி சில தகவல்கள் மட்டுமே இங்கு பகிரப்படுகிறது. அவரின் தனிப்பட்ட விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

பி.பி.ஏ பட்டதாரியான சிந்து என்ற அப்பெண்ணுக்கு 33 வயதாகிறது. இவ்வளவு காலம் கடந்த பின்னும் திருமணம் ஏற்படாமல் இருந்ததால் தான் இத்தனை பிரச்சனைகளில் சிக்கியுள்ளார்.

தந்தை குடும்பத்தோடு தொடர்பின்றி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.தாயாருடன் சிந்து வசித்து வந்துள்ளார்.

வெகுகாலமாக திருமணம் ஆகாமல் ‘முதிர்கன்னி’ என்று அக்கம் பக்கத்தினரால் கேலியும், கிண்டலும் செய்யப்பட்ட அவர், தெரிந்தவர்கள், மேட்ரிமோனியல் பல வழிகளில் மாப்பிள்ளை தேடியுள்ளார்.

ஆனால் திருமணம் அமையாமலேயே இருந்துள்ளது. இது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க ஒரு ஜோதிடரிடம் சென்றுள்ளார்.

அவர் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் தனக்கு உதவுமாறு அமைச்சர் ஜெயக்குமாரிடம் சென்றுள்ளார்.

அதில் தான் பிரச்சனை தொடங்கியுள்ளது என்று கூறுகின்றனர். இப்போது சிந்துவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்ப்பட்டுள்ளதால் பத்திரமாக உறவினர் ஒருவரது வீட்டில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.