குலுங்கிய கட்டிடங்கள்., தலைதெறித்து ஓட்டம் பிடித்த மக்கள்.!!

இந்தோனேசிய தீவுகளை தொடர்ந்து தற்போது அனைத்து நிலநடுக்கோடுகளில் உள்ள அனைத்து நாடுகளையும் தற்போது நிலநடுக்கம் பயங்கரமாக தாக்கி வருகின்றது. இதன் காரணமாக நிலநடுக்கோடுகளுக்கு அருகில் உள்ள நாடுகள் அனைத்தும் பெரும் அச்சத்துடன் இருந்து வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டில் அமைந்துள்ள தீவு பகுதி ஜகிந்தோஸ். இந்த தீவு பகுதியில் இன்று காலையில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.25 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த வேளையில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு பதறியபடி வெளியே வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மிகவும் கடுமையாக குழுங்கியதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து சாலைகள் மற்றும் மைதானங்களில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்திற்கு தற்போது வரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் ஏதும் தற்போது வரை வெளியிடப்பவில்லை.